Wednesday 15 August 2018

மாதிரி பள்ளி திட்டம் துவக்கி வைப்பு நவீன ஆய்வகம், டிஜிட்டல் நூலகத்துடன் வசதிகள்


 நவீன ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளுடன், மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், மாதிரி பள்ளி திட்டத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

'நவீன ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளுடன், மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி துவக்கப்படும்&' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, மத்திய அரசின் பங்களிப்புடன் கூடிய, மாதிரி பள்ளிகள் திட்டம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னையில், எழும்பூரில் உள்ள, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாதிரி பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 50 லட்சம் ரூபாயில், நவீன ஆய்வகம், டிஜிட்டல் நுாலகம், வண்ணமயமான வகுப்பறை, ஆர்.., சுத்திகரிப்பு குடிநீர் வசதி, மழலையர் பள்ளி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாதிரி பள்ளி திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என, 32 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளில் எந்த மாதிரியான நவீன வசதிகள் உள்ளனவோ, அந்த வசதிகள் அனைத்தும், மாதிரி பள்ளிகளில் இருக்கும். தரமான குடிநீர், வகுப்பறை, ஆய்வகம் மற்றும் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வழியே கற்பித்தல் என, புதுமையை புகுத்தி, மாதிரி பள்ளிகள் செயல்படும்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும் படித்து முடிக்க, மாதிரி பள்ளிகள் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் கூறுகையில், மாதிரி பள்ளிகளின் செயல்பாடுகளும், கல்வி தரமும், மற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
 ஆசிரியர்கள், மாதிரி பள்ளிகளை வந்து பார்த்து விட்டு, தங்கள் பள்ளிகளையும் அதேபோல், மாற்ற வேண்டும்,என்றார்.விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில மகளிர் பள்ளி, முன்னாள் மாணவியுமான, பவானி சுப்பராயன், விஜயகுமார் எம்.பி., - நட்ராஜ் எம்.எல்.., - பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரி, திருவளர் செல்வி, பள்ளி தலைமை ஆசிரியை, கண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திறன் வளர்ப்பு மையங்கள்
அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:
*
வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்று முதல் 5ம் வகுப்புக்கும், 6 முதல் 8ம் வகுப்புக்கும், தனியார் பள்ளிகளை போன்று, பல வண்ணங்கள் கலந்த சீருடைகள் அறிமுகம் செய்யப்படும்

*  
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்பிலேயே, இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் வழங்கப் பட உள்ளது

*
மாநிலம் முழுவதும், 3,000 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள்; நவீன ஹைடெக் ஆய்வகங்களுக்கான பணிகள், ஒரு மாதத்தில் துவங்கும்

*   
பள்ளிக்கு மாணவியர் சென்று வரும்போது ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, 14417 என்ற, தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

*   
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை இல்லை; 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலாவது வேலை வேண்டும் என, இன்ஜினியரிங் முடித்த பல இளைஞர்கள் கேட்கும் நிலை உள்ளது. எனவே, பள்ளியிலேயே வேலை வாய்ப்பு கல்வியை பெற, திறன் வளர்ப்பு மையங்கள் உருவாக்கப்படும்.     இவ்வாறு அவர் கூறினார்.

திமிரி ஒன்றியம் கலவைப்புத்தூர் நடுநிலைப்பள்ளியில் நேற்று (15-08-2018)நடைபெற்ற 72 வது விடுதலை நாள் விழா நிகழ்ச்சிகள்


காலை வழிபாட்டு கூட்டச் செயல்பாடுகள்-(16-08-2018)


திருக்குறள்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
 பொருள்
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்
 பழமொழி
Do evil and look for like.
அடாது செய்பவர் படாது படுவர்
பொன்மொழி
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே நமக்கு பல திறமைகளும் வருகின்றன. -- A.P.J.அப்துல் கலாம்
இரண்டொழுக்க பண்பாடு :
➽ 1.நான் என்னுடைய வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும்  மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்
பொது அறிவு
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா
இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது4
 நீதிக்கதை
தந்திர நரி --  திருக்குறள் நீதிக் கதைகள் 
ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது
சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.
இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது
தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.
தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்றுஅன்பாகபேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில்சென்றது.மானும்உதவிதான் செய்கிறதுஎன்றுஎண்ணி நம்பிவிட்டது.
நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. வணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.என திருவள்ளுவர் கூறுகிறார்.
இன்றைய செய்திகள்

⏯ நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொட்டும் மழையில் தமிழக முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். 


⏯சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகளை முதல்வர் வழங்கினார். சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்சா குழுவுக்கு அப்துல் கலாம் விருது

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்: பிரதமர் மோடி


⏯ கேரள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு. நேற்று  ஒரே நாளில் 22 பேர் பலி


⏯ முல்லை பெரியாறு அணை 3 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டி உள்ளது


.தமிழக கேரளா எல்லையில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலபயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.


⏯ குமரியில் தொடர்மழையால் கிராமங்களில் வெள்ளம்: பல இடங்களில் சாலைகள் துண்டிப்பு, ரயில் போக்குவரத்தும் பாதிப்பு


 விளையாட்டு செய்திகள்

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.